தென் தமிழகத்தில் தென்கோடியில் முக்கடல் சங்கமிக்கும் எழில்மிகு குமரி மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதயம் வைர வரிகளால் பொறிக்கப்படவேண்டியவை ஒரு மிகப்பெரும் வரலாற்று சாதனை. குமரி மாவட்ட ஏழை எளிய மாணாக்கரின் உயர்கல்வி வளர்ச்சியினை கருத்தில்கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது 2015 – 2016-ஆம் கல்வியாண்டில் இம்மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அவ்வறிவிப்பின்படி குமரிவாழ் மக்களின் நீண்டகால கனவு நனவாகும் வண்ணம் பல்வேறு தடைகற்களைக் கடந்து 30-05-2016 அன்று கல்லூரி துவங்கப்பட்டு ஆங்கிலம், பொருளியல், வணிகவியல் என்ற மூன்று இளங்கலைப் பாடப்பிரிவுகளுடன் நாகர்கோவில் வடசேரி நெசவாளர் தெருவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக இயங்கிவந்தது.
கல்லூரியின் நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்காகத் தமிழக அரசு கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தினுள் 4 ஏக்கர் நிலத்தைத் தேர்வுசெய்தது. ஓராண்டில் நிரந்தரக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 05-09-2017 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 2017-2018 ஆம் கல்வியாண்டில் கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய இரு இளம் அறிவியல் பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டுள்ளன. 2018-19 ஆம் கல்வியாண்டில் வரலாறு,
இயற்பியல், புள்ளியியல், வணிக நிர்வாகவியல் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளும் புதிதாகத் துவங்கப்பட்டு தற்போது ஒன்பது பாடப்பிரிவுகளுடன் சிறப்புற இயங்கிவருகின்றது.
குறிக்கோள்:
சமுகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியருக்கு ஆக்கப்பூா்வமான கல்வியை வழங்குவதும் சமுக அக்கறையும் ஆளுமைம்மிக்க நல்ல குடிமக்களாக உருவாக்குவதும் இக்கல்லுாாின் குறிக்கோள் ஆகும்.